மகிந்தவின் 52 நாள் புரட்சியில் எதிர்காலத்தை இழந்த ரணில்…. – Sri Lankan Tamil News

மகிந்தவின் 52 நாள் புரட்சியில் எதிர்காலத்தை இழந்த ரணில்….

இந்த செய்தியைப் பகிர்க

இறந்தகாலத்தில் இந்த உலகம் கண்ட வரலாற்று புரட்சிகள் பல.. இந்த புரட்சிகளில் அடியோடு காணாமல் போன தலைவர்களும் உண்டு. அந்த புரட்சியையே தனது வரலாறாக நிலை நிறுத்திய மாபெரும் சரித்திர நாயகர்களும் உண்டு.

அதனைப் பின்தொடர்ந்து இந்த அவ்வப்போது புரட்சிகள் சிலவும், புரட்சியாளர்கள் சிலரும் ஆங்காங்கே வேர்விட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தவகையில் எமது நாட்டில், தனி வழி கோரிய தமிழின போராட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது… ஆனால் அந்த போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளில் சர்வதேசத்தை ஒரே இரவில் இலங்கையை திரும்பிப் பார்க்க வைத்த விடயம் கடந்த வருடம் இலங்கையில் நடந்த ஒக்டோபர் புரட்சி.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரி தனது முழு அதிகாரத்தையும் ஒரே இரவில் பயன்படுத்திவிடவும் அவாவில் இருந்தார் போல, ஒரே இரவில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார்.

நாட்டில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும்போதே மகிந்தவை பிரதமராக்கி புரட்சி ஒன்றை படைத்திருந்தார் மைத்திரி… மைத்திரி மட்டுமா மகிந்தவும் கூடத்தான்.

பதவி ஏற்றவுடன் கலைந்தது அமைச்சரவை.. அடுத்தது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த அடுத்த புரட்சிகளை மகிந்த ராஜபக்ச அதிரடியாக நிகழ்த்திக் காட்டினார்.

அன்றிலிருந்து, மகிந்த நான்தான் பிரதமர் என்றார், ரணில் விக்ரமசிங்க நானும்தான் பிரமர் என்றார். ஒரு நாட்டில் இரு பிரதமர்களை வைத்துக்கொண்டும் மக்கள் திண்டாட்டத்தில் இருந்த காலம் அது.

ஆனால், அன்று மகிந்த அரங்கேற்றிய 52 நாட்கள் புரட்சியின் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

மகிந்தவின் புரட்சியால் பதவியை இழந்தார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனது எதிர்கால அரசியலை இழந்தார் ரணில்.

அன்றை சதிப்புரட்சியினை தோற்கடிக்க நீதிமன்றத்தை நாடிய கூட்டமைப்பின் எம்பி சுமந்திரன் தலைமையிலான குழுக்கள் வெற்றியடைந்திருந்தன. மகிந்தவின் திடீர் பிரதமர் அவதாரம் நீதிமன்றத்தின் மூலம் அஸ்தமனமானது.

ஆனால்…. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என அடம்பிடித்த மைத்திரி அடுத்ததாக பிரதமர் பதவியை மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கமாட்டேன் என ஒற்றைக் காலில் நின்றிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மாற்றீடாக மற்றுமொருவரை பிரதமராக நியமிக்க மைத்திரி சம்மதம் வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டது..

அந்த சந்தர்ப்பத்தில் விட்டுக் கொடுக்க மறுத்த ரணில் விக்ரமசிங்க தானே பிரதமராக மீண்டும் பதவியேற்பேன் என சபதமேற்று அதில் வெற்றியும் கண்டார்.

ஆனால்.. இன்று! அப்போது பிரதமர் பதவியை, ரணில் விக்ரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு விட்டுக் கொடுத்திருந்தால் தற்போது ஜனாதிபதி தேர்தல் களத்தில் தானே வேட்பாளராக குதித்திருக்கும் வாய்ப்பை தானாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்றிருப்பார்.

இப்போதும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறிகளே நிலவி வந்தன. பல்வேறு காரணங்கள் பல்வேறு தெரிவுகள் என வேட்பாளர் தெரிவு இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது.

இதனை இராஜதந்திரம் எனக் கூறிக்கொண்டாலும் ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. மக்கள் மாத்திரம் அல்ல வேட்பாளரை அறிவித்து விட்டு காத்திருந்த எதிர்க்கட்சியும் கூடத்தான்.

எவ்வாறோ பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அங்குதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜதந்திர காய்நகர்த்தலை மேற்கொண்டிருக்கிறார்.

சஜித் தான் வேட்பாளர் ஆனால் நிபந்தனைக்கு கட்டுப்பட்ட வேட்பாளர் என்னும் ரணிலின் அறிவிப்பு மீண்டும் ஒரு சருக்கலை தோற்றுவிக்கின்றது.

தலைமை பதவி எனக்கு இதற்கு சம்மதம் எனின் வேட்பாளர் சஜித்தாக இருக்கலாம் என ரணில் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் அவர் தலைமை பதவியை தக்க வைக்கவே காய்நகர்த்துக்கின்றார் என்பது புலப்படுகின்றது.

அத்துடன், அன்று ரணிலுக்காக போர்க்கொடி தூக்கி நீதிமன்றம் சென்ற சுமந்திரன் எம்.பி தலைமையிலான குழுவினர் வெற்றியடைந்திருந்தனர்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பலம்மிக்க ஒரு பதவி சம்பந்தனிடம் இருந்து இதனால் பறிபோனது. ரணிலின் இடத்தை தவறவிட்ட மகிந்த ராஜபக்ச சம்பந்தனின் இடத்தை குறிவைத்து அதை தக்க வைத்தும் கொண்டார்.

மகிந்தவின் புரட்சியில் சம்பந்தன் பதவியை இழந்தார், ரணில் எதிர்காலத்தை இழந்தார்….

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply