மசாஜ் நிலையம் முற்றுகை: மூன்று பேர் கைது – Sri Lankan Tamil News

மசாஜ் நிலையம் முற்றுகை: மூன்று பேர் கைது

இந்த செய்தியைப் பகிர்க

கல்கிஸ்சை, காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, நீதிமன்ற அனுமதியை பெற்று பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நிலையத்தின் முகாமையாளர் என கூறப்படும் ஆணொருவரும், தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக கருதப்படும் இரு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 42 வயதானவர்கள் எனவும் இவர்கள் மொனராகலை, கலவானை, லெல்லோப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply