ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சஜித் – Sri Lankan Tamil News

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சஜித்

இந்த செய்தியைப் பகிர்க

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சஜித் பிரேமதாச போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் ரணிலுக்கு எதிரானவர்களை இணைத்துக்கொண்டு பட்டப்பகலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றவே அவர் அந்த வாய்ப்பை பெற்றதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

டொலர்களுக்காக மட்டுமே வாய் திறக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சந்திரகுப்த தெனுவர, காமினி வியங்கொட போன்றவர்கள், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நல்லாட்சி குறித்து செய்த போதனையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள், நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற சமூக அபிலாஷைக்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவை வழக்குகளில் சிக்கவைக்கும் உடன்பாட்டை செயற்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் சமூக செயற்பாட்டாளர்கள் என்று கூறிக்கொள்வோரின் நல்லாட்சி என்ற கோஷம் புஷ்வாணமாகியது.

இந்த காலத்தில் சட்டத்தை வளைக்கும் பொலிஸ் மா அதிபர்கள், சொலிசிட்டர் ஜெனரல்கள், இலஞ்ச ஆணைக்குழு பணிப்பாளர்கள் உருவாகினர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பதிலாக அலரி மாளிகை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்தது.

எனினும், இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பாக பிரஜைகள் சக்தியின் டொலர் காகங்கள் வாய் திறக்கவில்லை எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply