கோத்தபாய பாரதூரமான குற்றங்களை செய்துள்ளார்! சிரேஷ்ட ஊடகவியலாளர் – Sri Lankan Tamil News

கோத்தபாய பாரதூரமான குற்றங்களை செய்துள்ளார்! சிரேஷ்ட ஊடகவியலாளர்

இந்த செய்தியைப் பகிர்க

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜக்சவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் காமனி வியன்கொட, பேராசிரியர் தெனுவர ஆகியோரது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியன சம்பந்தமான விசாரணைகளை தான் நன்றாக ஆராய்ந்ததாகவும், அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உரிமை இல்லை எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளரான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஏனைய வழக்குகளை ஒதுக்கி வைத்து விட்டு அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினையை மட்டும் எடுத்து கொண்டால், கோத்தபாய ராஜபக்ச செய்துள்ள குற்றம் பாரதூரமானது.

அவர் குடியுரிமை சட்டத்தை மீறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தையும் மீறியுள்ளார்.

போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச 1976ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளார்.

அதன் இலக்கம் 491724021V4, கடவுச்சீட்டின் இலக்கம் N5384975. அவருக்கு 2003 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது.

குடியுரிமை சட்டத்தின்படி வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற ஒருவரது இலங்கை குடியுரிமை தானாவே இரத்தாகும்.

2005ஆம் ஜனாதிபதி தேர்தல் நடந்த போது, கோத்தபாய அமெரிக்கா பிரஜையாக தற்காலிக விசா அனுமதியை பெற்றே இலங்கை வந்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கோத்தபாய ராஜபக்சவுக்கு நவம்பர் 21ஆம் திகதி இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் கூட நியமிக்கப்படாத நிலையில் துரித கதியில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்ப பத்திரத்தில் தன்னை கணனி பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அந்த விண்ணப்பத்திற்கு பொய்யான தகவல்களை உள்ளடக்கியுள்ளார். இதனால், அதுவும் போலி ஆவணம்.

அத்துடன் அவரது புதிய அடையாள அட்டையை (194917210010) கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை இருக்கும் போதே அடையாள அட்டையை பெற்றுள்ளார்.

சட்டத்திற்கு முரணான புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டிருக்கும் போதே, 2017, 2018, 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் செல்லுப்படியற்ற அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் வேண்டும் என்ற செய்த பாரதூரமான தவறாக கருத முடியும். அதேவேளை அமெரிக்க குடியுரிமை இருக்கும் போதே கோத்தபாய ராஜபக்ச தனது இலங்கை கடவுச்சீட்டை (N192600594) பெற்றுள்ளார்.

இவை அனைத்தும் பாரதூரமான குற்றங்கள். இவை தெரிந்தே செய்த தவறுகளே அன்றி தவறுதலாக செய்தவை அல்ல.

சட்டத்தை அமுல்படுத்தும் போது, கோத்தபாய சம்பந்தமாக எப்படியான கொள்கையை பின்பற்றபடும் என்பதை கூற முடியாது.

அதற்கு அமைய அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த பாரதூரமான குற்றங்களுக்கு தண்டனை கிடைப்பதை தவிர்க்க முடியாது எனவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply