தமிழர் செயலை பாராட்டி நிதி வழங்கிய ஜனாதிபதி – Sri Lankan Tamil News

தமிழர் செயலை பாராட்டி நிதி வழங்கிய ஜனாதிபதி

இந்த செய்தியைப் பகிர்க

கண்டி – யட்டிநுவர வீதியில் கட்டிடம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட தீயின் போது தமது குடும்பத்தை காப்பாற்றிய ராமநாதன் ராமராஜ் என்பவர் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டவர்.

தனது குடும்பத்துடன் கட்டிடத்தின் 5ஆவது மாடியில் வசித்து வந்த ராமராஜ், தீ பரவிய போது, தனது உயிரையும் பொருட்படுத்தாது தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியையும் எந்த காயங்களும் இன்றி காப்பற்றினார்.

அவரது செயலை பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 இலட்சம் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி இந்த தொகையை வழங்கியுள்ளார்.

தங்கமுலாம் பூசும் தொழில் செய்து வந்த ராமராஜிக்கு அவரது வீடு எரிந்து போனதால், வாழ்வாதார வழியில் இல்லாமல் போனது.

தொழிலுக்கு தேவையான தளபாடங்களை கொள்வனவு செய்து மீண்டும் வாழ்வாதார தொழிலை ஆரம்பிக்க உதவியாக ஜனாதிபதி இந்த நிதியை வழங்கியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply