கடந்த எட்டு மாதங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! – Sri Lankan Tamil News

கடந்த எட்டு மாதங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இந்த செய்தியைப் பகிர்க

கடந்த 8 மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180 ரூபாவை கடந்துள்ளது.

அதற்கமைய 8 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180.0828 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 183.7550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மத்திய வங்கியின் நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180.0825 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 0.7 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply