கோட்டாபயவின் முக்கிய ஆவணங்களிற்கு குடிவரவு திணைக்களத்தில் நேர்ந்த கதி! கசிந்தது தகவல் – Sri Lankan Tamil News

கோட்டாபயவின் முக்கிய ஆவணங்களிற்கு குடிவரவு திணைக்களத்தில் நேர்ந்த கதி! கசிந்தது தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் குடிவரவு, குடியல்வு திணைக்களத்திடம் இல்லாமல் போனமைக்கு காரணம், அவர்கள் அந்த ஆவணங்களை அழித்திருக்க கூடும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதிட்டார் கோட்டாபய சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரண ரொமேஷ் டி சில்வா.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (02) காலை 9.30 மணியளவில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் வௌிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாக குறித்த அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் முறைப்பாட்டாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையின்போது, குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்காக முன்னிலையாகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே, கோட்டாபயவின் ஆவணங்கள் தமது திணைக்களத்தில் இல்லையென தெரிவித்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த ஆவணங்கள் குடிவரவு துறையால் அழிக்கப்பட்டதாக வாதிட்டார்.

எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே, 2007 ஆம் ஆண்டில் திணைக்களத்தின் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டடு விட்டதாகவும், எனினும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்படவில்லை என்று தெரிவித்து, கோட்டாபய தரப்பு வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply