பல்வகை விலங்கினங்களை காண புந்தல நோக்கி பயணிப்போம் – Sri Lankan Tamil News

பல்வகை விலங்கினங்களை காண புந்தல நோக்கி பயணிப்போம்

இந்த செய்தியைப் பகிர்க

இது இலங்கையின் தெற்கு மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புந்தல தேசிய பூங்கா, இலங்கை சுற்றுலாத்தளங்களில் மிகவும் பிரசித்திபெற்ற இடமாக விளங்குகின்றது.

நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் பறவைகள், கூட்டமாக வானில் வட்டமிடுவதை காணமுடிவதுடன், சில மாதங்கள் மட்டுமே இப்பகுதியில் இவற்றை காணக் கூடியதாக இருக்கும்.

நவம்பர், டிசம்பரில் வருகைத்தரும் இந்த பறவையினங்கள் பெப்ரவரி வரை இலங்கையில் தங்கியிருந்து பின்னர் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதை காண்பதற்காக உள்ளூர், வெளியூர்வாசிகள் அதிகளவில் வருகைத்தருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஹம்பாந்தோட்டை மட்டுமல்லாது புந்தல தேசிய பூங்கா லுனுகம் வெஹெர கட்டுநாயக்க, அதனையண்டிய பகுதிகளிலும் இவற்றை காணக்கூடியதாக இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி ஏராளமான வனவிலங்குகளிகன் வசிப்பிடமாகவும் இந்த பூங்காவே காணப்படுகின்றது. அத்துடன் கிராமங்களிலிருந்து பிடிக்கப்படும் வனவிலங்குள், பாம்புகள், வேறுவகை விலங்கினங்களும் பாதுகாப்பாக கொண்டுவந்து புந்தல பூங்காவிலேயே விடப்படுகின்றன. இதனால் பல்வகை விலங்கினங்களைக் கொண்ட ஒரு பூங்காவாக இது விளங்குகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply