மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர்- நீதிமன்றம் கொடுத்த தண்டனை – Sri Lankan Tamil News

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர்- நீதிமன்றம் கொடுத்த தண்டனை

இந்த செய்தியைப் பகிர்க

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாக தாம் தொடர்ச்சியக குறித்த அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு வந்ததாக பாதிக்கபட்ட மாணவிகள் தமது பெற்றோர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இது தொடர்பில் பெற்றோர்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான அதிபர் நேற்றுகைது செய்யப்பட்டு ஹெல்பொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்டிருந்தார்.

இதன் போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க ஹெல்பொட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீகொட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியேரை நேரடியாக சந்தித்து குறித்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply