இலங்கையின் வரலாற்று பொக்கிசம் – ராவணன் குகை பற்றி கேள்விப்பட்டிருகின்றீர்களா? – Sri Lankan Tamil News

இலங்கையின் வரலாற்று பொக்கிசம் – ராவணன் குகை பற்றி கேள்விப்பட்டிருகின்றீர்களா?

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கையின் பதுளையின் எல்ல நகரத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், பண்டாரவளையிலிருந்து 11 கிமீ (7 மைல்) தொலைவிலும் ராவணன் குகை அமைந்துள்ளது.

இது ஒரு சிறிய குகை, இது சுமார் 50 அடி அகலம், 150 அடி நீளம் மற்றும் 60 அடி உயரம் கொண்டது. சீதாபிராட்டியை கடத்தி வந்த ராவனண் ஒளித்து வைக்க இந்த குகையை பயன்படுத்தியதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 1,370 மீ (4,490 அடி) உயரத்தில் ஒரு குன்றின் அஸ்திவாரத்தில் அமைந்துள்ளது,

இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகளவாக வருகைதரும் வரலாற்று மதிப்பைக் கொண்ட இந்த குகை இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த குகைக்கு 1KM தொலைவில் மகா ராவண விகாரை எனும் ஒரு புத்த மத விகாரை ஒன்ரும் அமைந்துள்ளது.

இராவணன் குகையை நோக்கிச் செல்ல செங்குத்தான பாதையில் கிட்டத்தட்ட 750 கடினமான படிகளில் ஏற வேண்டும். அத்துடன் சில இடங்களில் எந்த படிகளும் இல்லை பாறைகள் மட்டுமேதான் உள்ளது.

இந்த சுரங்கங்கள் இராவணன் மன்னனின் கட்டடக்கலை திறனை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

சுரங்கங்கள் மலைகள் வழியாக விரைவான போக்குவரத்து வழிமுறையாகவும் இரகசிய வழிப்பாதையாகவும் செயல்பட்டிருக்கின்றன

இந்த சுரங்கங்களை உற்று நோக்கினால் அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை, இயற்கையான வடிவங்கள் அல்ல என்பது தெரியும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply