மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் மரணம் – Sri Lankan Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் மரணம்

இந்த செய்தியைப் பகிர்க

திருகோணமலை – லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்றிரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கனகராசா வசந்தகுமார் எனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனது நண்பருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவரது நண்பர் தங்கராசா விஜிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்கைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் இன்றிரவு கனகராசா வசந்தகுமார் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவரது சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply