’எழில்மிகு ஹிரிவடுன்ன’ சென்று பார்க்கலாம் வாருங்கள்… – Sri Lankan Tamil News

’எழில்மிகு ஹிரிவடுன்ன’ சென்று பார்க்கலாம் வாருங்கள்…

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கையின் ஹபரண பகுதியில் அமையபெற்றுள்ள ஹிரிவடுன்ன கிராமப்புறமானது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களில் ஒன்றாகும். இக்கிராமப்புறத்தில் சஃபாரி (safari) ஜீப் பயணம் மேற்கொள்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கலாம்.

இப்பயணமானது ஒரு அழகிய நீர்த்தேக்கத்துடனும் அழகான மலையேற்றத்துடன் தொடங்குகிறது. ஒரு படகுச் சவாரிக்குப் பிறகு, நெல் வயல்கள் மற்றும் கிராமப்புற தோட்டக்கலைகளுடன் மாட்டு வண்டியில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டுவதுடன், பாரம்பரிய கிராம வீடுகளையும் இங்கு காண வாய்ப்பு கிடைக்கின்றது.

மலையேற்ற தொடக்கத்தில் நடந்து செல்லும் போது, ஹிரிவடுன்னயில் அமைந்துள்ள சிறு சிறு கிராமங்களை காணமுடிவதுடன் புதை சேறு, காடுகள், பல்வகை பறவையினங்கள் மற்றும் பூச்சியினங்கள் என்பவற்றை கண்டு இரசிக்க முடியும்.

அத்துடன் கிராம மக்கள் மீன் பிடித்தல் மற்றும் ஏரியின் விளிம்பில் துணி துவைத்தல் ஆகியவற்றைக் கவனிக்கமுடிவதோடு, ஒரு படகில் ஏறி படகு சவாரி செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது. பிறகு ஒரு கிராமத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று, மாட்டு வண்டி சவாரியை அனுபவித்து மகிழ்ந்தவாறு இலங்கையின் அறுசுவை மதிய உணவை உண்டு மகிழலாம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply