மஹிந்த-மைத்திரி கூட்டணியில் உருவாகும் கதிரை – Sri Lankan Tamil News

மஹிந்த-மைத்திரி கூட்டணியில் உருவாகும் கதிரை

இந்த செய்தியைப் பகிர்க

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான கூட்டணியின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் செயற்படவுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டணி தொடர்பிலான யாப்பு வெளியிடும் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, இரு தரப்பிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சிகள் இந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பவற்றிலுள்ள அங்கம் வகிக்கவுள்ளன.

புதிய கூட்டணியின் சின்னமாக கதிரை பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்கு இரு தரப்புக்களும் உடன்பட்டுள்ளதாகவும்குரிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த சின்னத்தின் கீழ் எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply