சிறுவன் சுஜித்திற்காக வலிகிழக்கில் பிரார்த்தனை – Sri Lankan Tamil News

சிறுவன் சுஜித்திற்காக வலிகிழக்கில் பிரார்த்தனை

இந்த செய்தியைப் பகிர்க

தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பத்திரமாக மீளவேண்டும் என யாழ் வலிகாமம் கிழக்கில் இன்று காலை விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.

இதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர், ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்துகொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply