தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு விசாரணை – Sri Lankan Tamil News

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு விசாரணை

இந்த செய்தியைப் பகிர்க

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்களின் முறையீட்டின்படி ஆகக்குறைந்தது இரண்டு அரச பணியாளர்கள் தேர்தல் ஒழுங்குகளை மீறியுள்ளனர்

இதில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனியவும் ஒருவராவார்.

தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரட்நாயக்கவின் தகவல்படி வைத்திய கலாநிதி அநுரத்த பாதெனிய, கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றிருந்தமை தேர்தல் விதியை அரச பணியாளர் ஒருவர் மீறிய செயலாகும்.

இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்தப்படியாக பாதெனிய

அமர்ந்திருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.

எனினும் வழக்கு ஒன்று தொடரப்படும்போது தேர்தல்கள் ஆணைக்குழு சாட்சியாக முன்னிலையாகமுடியும் என்றும் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply