சுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை! அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள் – Sri Lankan Tamil News

சுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை! அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்

இந்த செய்தியைப் பகிர்க

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதன் அறிக்கை வெளியாகியுள்ளது.

திருச்சியில் நான்கு நாட்களுக்கு முன்னர் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.

உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் சில இடங்களில் மிக மோசமாக சிதிலம் அடைந்து இருக்கிறது. 80 மணி நேரம் கீழே இருந்ததால் உடல் சிதிலம் அடைந்துள்ளது.

மேலும் உடலில் சில பாகங்கள் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் உடலை போர்த்தியபடி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

சுர்ஜித் உடலை வெளியாட்கள் யாரிடமும் காட்டாமல் எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் வைத்து சுர்ஜித் உடல் அவரின் பெற்றோருக்கு மட்டும் காட்டப்பட்டது.

இதையடுத்து சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று அதிகாலை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது சுர்ஜித்தின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் ஒரு கை, கயிறு கட்டப்பட்டு இருந்ததால் உடைந்து காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு உடலின் சில பாகங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் குழந்தை எப்போது இறந்தது என்பது குறித்த விவரங்களை மருத்துவர்கள் வெளியிடவில்லை.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply