வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி! – Sri Lankan Tamil News

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி!

இந்த செய்தியைப் பகிர்க

திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அன்புவழிபுரம் பிரதேசத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் ஒருவரை இன்று (01) கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்ப்பட்டவரின் வீட்டில் அவர் வளர்த்து வந்த 2 அடி நீளமான கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 105 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் அன்புவழிபுரம் பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 30 வயதுடைய நபர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் சட்ட நடவடிகைக்கு உட்படுத்தும் நோக்கத்தில் திருகோணமலை தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply