கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து: இருவர் வைத்தியசாலையில் – Sri Lankan Tamil News

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து: இருவர் வைத்தியசாலையில்

இந்த செய்தியைப் பகிர்க

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியும், நடத்துனருமே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பிலிருந்து, கோமரங்கடவல பகுதிக்கு சென்ற இலங்கை அரசுக்கு சொந்தமான பேருந்து நொச்சிக்குளம் பகுதியில் வீதியில் நின்ற மாட்டை பாதுகாக்க முற்பட்டபோது கல்வெட்டுடன் மோதியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னால் வந்து கொண்டிருந்த லொறியொன்றும் வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply