வவுனியா நகரில் டிப்பர் வாகனம் மோதி சிறுமி பலி – Sri Lankan Tamil News

வவுனியா நகரில் டிப்பர் வாகனம் மோதி சிறுமி பலி

இந்த செய்தியைப் பகிர்க

வவுனியா – இலுப்பையடி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதியுள்ளது.

இதன்காரணமாக 13 வயதான சிறுமி ஸ்தலத்தில் பலியானதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பியோட முற்பட்டபோது பொலிஸார் மற்றும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கூடிய இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply