யாழில் சுற்றித்திரியும் போலி புலனாய்வாளர்களால் ஒருவர் படுகாயம் – Sri Lankan Tamil News

யாழில் சுற்றித்திரியும் போலி புலனாய்வாளர்களால் ஒருவர் படுகாயம்

இந்த செய்தியைப் பகிர்க

யாழ். மருதனார்மடம், உரும்பிராய் பகுதியில் புலனாய்வாளர்கள் என கூறி அடையாள அட்டையினை பார்வையிட்டு நபரொருவரை கத்தியால் குத்தி தாக்கி விட்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இரவு மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த செ.செல்வகுமார் (வயது 50) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

டிப்பர் வாகன சாரதியான இவர் வாகனத்தை இணுவில் பகுதியில் உள்ள வாகன உரிமையாளரின் வீட்டில் தரித்து விட்டு, உரும்பிராய் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாம் புலனாய்வாளர்கள் என கூறி அவரின் தேசிய அடையாள அட்டையினை பார்வையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த நபரை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதுடன், அவரிடமிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply