இரகசிய தகவல் : சுண்டிக் குளம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பாரிய மர்மபொருள்! – Sri Lankan Tamil News

இரகசிய தகவல் : சுண்டிக் குளம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பாரிய மர்மபொருள்!

இந்த செய்தியைப் பகிர்க

சுண்டிக் குளம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 83 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் பலவற்றை நேற்று மீட்டுள்ளனர்.

குறித்த பொதிகளை சோதனையிடட போது கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை கடற்படையினர் பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply