இலங்கையில் வெள்ளை வான் சாரதி! வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் – Sri Lankan Tamil News

இலங்கையில் வெள்ளை வான் சாரதி! வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

இந்த செய்தியைப் பகிர்க

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்ச இருந்த போது வெள்ளை வானில் மக்களை கடத்தியதாக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வெள்ளை வானின் சாரதி எனக் கூறப்படும் நபர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அந்த நபர், கடத்தப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டதாகவும், கூரிய ஆயுதங்களில் குத்தி சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள். கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் வயிறு வெட்டப்பட்டு முதலை சாப்பிடுவதற்காக குளம் ஒன்றில் போட்டனர்.

வன்னியில் இருந்து பிரபாகரனின் பணத்தை நானே கொழும்புக்கு கொண்டு வந்தேன். அந்த பணத்தை கொடுக்கவில்லை என்று கூறி என்னை கடத்தினர்.

பொலிஸார், இராணுவத்தினர் உட்பட புலனாய்வுப் பிரிவினர் இந்த கடத்தல்களை செய்தனர் எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவல் வெளியானதன் பின்னர் இலங்கையில் வாழும் மக்கள் உள்ளிட்ட பலரை திடுக்கிட வைத்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply