சஜித்திற்கு ஆதரவாக மலையகத்தில் பிரசாரக் கூட்டம் – Sri Lankan Tamil News

சஜித்திற்கு ஆதரவாக மலையகத்தில் பிரசாரக் கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரசாரக் கூட்டம் மலையகத்தில் நடைபெற்றுள்ளது.

மலையகம், தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று இந்த பிரசாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ப.திகாம்பரம், அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், ஏ.அரவிந்தகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், எம்.உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம்.ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர்.ராஜாராம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த அற்புதராஜ், இ.தொ.காங்கிரஸைச் சேர்ந்த ஜெசிந்தா, என்டன் ஆகிய மூவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இணைந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply