சிங்களவர்களில் 75 வீதமானோர் கோத்தபாயவிற்கு வாக்களிப்பர்: ஜவாஹிர் சாலி – Sri Lankan Tamil News

சிங்களவர்களில் 75 வீதமானோர் கோத்தபாயவிற்கு வாக்களிப்பர்: ஜவாஹிர் சாலி

இந்த செய்தியைப் பகிர்க

சிங்களவர்களில் 75 வீதமானோர் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்க போகின்றார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து நேற்று இரவு வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவது உறுதி. அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையை பெற்றுத் தருவோம். ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் போன்று நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரை தீர்மானிக்கும் வேட்பாளராக நான் வரமாட்டேன்.

அவர்களின் வாக்குகள் 65 இலட்சங்களை தாண்டப் போகின்றது. கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கப் போகின்றது? இதனை உணர்ந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply