மைத்திரிக்கு பின் அமரவீர கட்சியின் தலைவர் – Sri Lankan Tamil News

மைத்திரிக்கு பின் அமரவீர கட்சியின் தலைவர்

இந்த செய்தியைப் பகிர்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மகிந்த அமரவீர தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் பெலியத்த தொகுதியின் அமைப்பாளர் உபாலி மேஹெட்டி தெரிவித்துள்ளார்.

அங்குகொலபொலஸ்ஸ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மகிந்த அமரவீரவின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தைகளுக்காக பெரிய பங்களிப்பை மகிந்த அமரவீர வழங்கினார்.

அந்த பேச்சுவார்த்தைகளில் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்குமாறு சிலர் கோரினர். தீர்மானம் தாமதிக்கும் போது. தனியாக வந்து பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவர் தனித்து முடிவுகளை எடுக்கவில்லை. கட்சி என்ற வகையில் தீர்மானத்தை எடுத்து அதனை அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகிந்த அமரவீர இருந்தார்.

மகிந்த அமரவீர எந்த பக்கத்திற்கும் தாவாது கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். இந்த அர்ப்பணிப்புக்காக அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் கிடைக்கும் எனவும் உபாலி மோஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply