கோத்தபாய வென்றால் ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துவார்: மயந்த திஸாநாயக்க – Sri Lankan Tamil News

கோத்தபாய வென்றால் ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துவார்: மயந்த திஸாநாயக்க

இந்த செய்தியைப் பகிர்க

கோத்தபாய ராஜபக்ச இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் நடக்கும் இறுதியான ஜனநாயக சுதந்திர தேர்தல் இந்த தேர்தலாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேராதனையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இந்த நாட்டில் ஜனநாயகமான மக்கள் உரிமை, சுதந்திரத்தை அடக்கி நாட்டில் ஹிட்லர் ஆட்சியை ஏற்படுத்துவார்.

தவறியேனும் இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீதே தாக்குதல் நடத்துவார்கள். பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கோத்தபாய உள்ளிட்ட அணியினர் அழித்து விடுவார்கள்.

மக்கள் எங்களிடம் அடுத்த பிரதமர் யார் என்று கேட்கின்றனர். சிரேஷ்ட மற்றும் இளையவர்களை இணைத்து அரசாங்கத்தை அமைக்க போவதாக சஜித் தெளிவான பதிலை வழங்கினார்.

நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பத்தை வென்றவரை பிரதமராக நியமிக்க போவதாக சஜித் குறிப்பிட்டுள்ளார் எனவும் மயந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply