கொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை – Sri Lankan Tamil News

கொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை

இந்த செய்தியைப் பகிர்க

நேற்று (11) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு இளைஞர் கொழும்பிலுள்ள முத்து ஆசனப்பதிவு நிலையத்தில் பஸ்சை பதிவு செய்தார். பிறின்ஸ் ரவல்ஸ் பஸ்லில்(NG 2255) 22ம் இலக்க ஆசனத்தை பதிவு செய்தார். இரவு 9.30க்கு பஸ் என்று சொன்னார்கள்.

அதன் படி இரவு 9.20க்கு அந்த இளைஞர் பஸ் ஏறுவதற்கு முத்து ஆசனப்பதிவு நிலையத்துக்கு வந்தான். வெள்ளவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு பஸ் 9.40க்கு வந்தது. பஸ் ஏறிய இளைஞர் 22ம் இலக்க ஆசனத்தில் இருக்க சென்ற போது இந்த ஆசனத்தில் ஒரு வெள்ளைக்காரன் இருந்தான். பஸ் சாரதியிடம் கேட்ட போது அவர் சொன்னார் மாறி பதிவு செய்து விட்டனர் என்றும் அந்த இளைஞரை 29ம் ஆசனத்தில் இருங்கள் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் மாற்றி தருகின்றேன் என்றார்.

பிறகு சிறிது நேரம் கழித்து சாரதி வந்து கூறினார் அந்த இளைஞரை யன்னல் பக்க ஆசனத்தில் அமரச்சொல்லி (30 ஆசனம்) அதன் படி அந்தப்பக்கத்தில் இருந்தார். அந்த இளைஞரும் சரி என்று சமாளித்து போகலாம் என்று நினைத்து இருந்தான்.

அதற்குள் முத்து ஆசனப்பதிவு நிலையத்துக்கு தொலைபேசி எடுத்து (0774144420) அந்த இளைஞர் சொன்னார். இப்படி நடந்து விட்டது என்று அவர் சொன்னார் சாரதியிடம் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு தொடர்பு கொள்ளுவது என்று. இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை.

சாப்பாட்டுக்காக பஸ் நீர்கொழும்பில் நிறுத்தினார்கள். சாப்பிட்டு ஏறும் போது அந்த இளைஞர் இருந்த ஆசனத்தில் இன்னொரு நபர் இருந்தார். அப்போது சாரதியிடம் கேட்ட போது அவருக்கு தான் இந்த இருக்கை பதிவு செய்யும் நிலையத்தால் ஒதுக்கப்பட்டது என்று சாரதியால் சொல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இறங்கும் போது சாரதியிடம் திரும்ப கேட்ட போது நீங்கள் முத்து ஆசனப்பதிவு நிலையத்தில் பதிவு செய்ய வேண்டாம் என்றும் பிறின்ஸ் ரவல்ஸ் இடம் பதிவு செய்யுங்கள் என்றும் இப்படி பிரச்சனைகள் நடக்காது என்றும் கூறினார். இதைப்பற்றி எழுத வேண்டும் என்று அந்த இளைஞர் சாரதியிடம் சொல்ல எழுதுங்கள் என்றும் அகங்காரத்துடன் பதில் சொன்னார்.

இப்படி தான் தினம் தினம் கொழும்பு பஸ்ஸில் எத்தனை கொடுமைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர் என்று தெரியவில்லை.

தமிழருக்கு எதிரி தமிழர் தான்.

சிங்களவர்கள் உரிமை தரவில்லை என்று நாங்கள் சண்டை செய்கின்றோம். ஆனால் காசு கொடுத்து பதிவு செய்த ஆசனத்துக்கு கூட உரிமை இல்லாமல் போகின்றது என்பது கவலைக்குரிய விடயம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply