ஜனாதிபதி தேர்தலுக்காக தமது சொத்துக்களை பந்தயம் கட்டும் வாக்காளர்கள்! – Sri Lankan Tamil News

ஜனாதிபதி தேர்தலுக்காக தமது சொத்துக்களை பந்தயம் கட்டும் வாக்காளர்கள்!

இந்த செய்தியைப் பகிர்க

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் இரு தினங்கள் மாத்திரம் உள்ள நிலையில், வெற்றியாளர் தொடர்பில் வாக்காளர்கள் பந்தயம் கட்டும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்காக தேயிலை தோட்டங்கள், பலா மரங்கள், பணம், காணிகள் என்பன பந்தயங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஏக்கர் தேயிலை தோட்டத்தை, ஒருவர் பந்தயத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அதற்காக அதற்கு சமமான இன்னும் ஒரு தேயிலை தோட்டத்தையும், பலா மரங்கள் இரண்டையும், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் பந்தயத்திற்காக பயன்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சில உணவங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் சேவை செய்யும் ஊழியர்களும் பந்தயம் கட்டியுள்ளனர். அதற்காக 10 லீட்டர் ஐஸ் கிறிம்களை பயன்படுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply