மிகவும் நுட்பமான முறையில் கடத்தல்! வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்கவில் சிக்கினார் – Sri Lankan Tamil News

மிகவும் நுட்பமான முறையில் கடத்தல்! வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்கவில் சிக்கினார்

இந்த செய்தியைப் பகிர்க

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களை தான் அணிந்திருந்த பாதணிக்குள் நுட்பமாக மறைத்து வைத்துக் கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்ரேன் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் இரண்டு முறை இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை பெங்களூர் நகரத்திலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL174 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

அனைத்து சோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதிக்கு சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அணிந்திருந்த இரண்டு பாதணிகளில் 2 கிலோ 320 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை அவர் மறைத்து வைத்துள்ளார்.

இந்த தங்க பிஸ்கட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply