இலங்கை காட்டும் புதிய பாதை எப்படி? – Sri Lankan Tamil News

இலங்கை காட்டும் புதிய பாதை எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி மீண்டும் தடம் புரண்ட அல்லது இஷ்டப்படி மற்றவர்களை வதைத்த இராணுவத் தளபதி இந்த நாட்டின் ஜனநாயகப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்ற கருத்தை அடுத்தடுத்து கிளப்பும்.

இலங்கையில் மக்கள் முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளில் 52 சதவீதம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்றிருக்கிறார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிக சதவீத வாக்கு பெறுபவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். இந்திய நடைமுறை போல ஜனாதிபதியை மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யும் நடைமுறை கிடையாது.

மகிந்த ராஜபக்ச காலத்தில், கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது தமிழர் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் வேட்டையாடியவர்.

அழிக்க நினைத்தவரை குறிவைத்து தாக்குவதில் கில்லாடி என்று பெயர் பெற்றவர் இன்று அதிபராகி விட்டார். அவர் சமீபத்தில் இன்றைய பா.ஜ. அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அன்றைய சூழ்நிலையில் இருந்து மாறுபட்ட சூழ்நிலையில் இன்று இலங்கை இருக்கிறது. ஏனெனில் ஜனாதிபதி சிறிசேனா பிரதமர் ரணில் ஆகியோர் அமெரிக்க ஆதரவு சிந்தனைக்காரர்கள் என்பதுடன் நிர்வாகம் சீராக இருந்ததில்லை.

அவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப இந்திய உதவிகளுடன் செயல்பட்டனர். அதே சமயம் பிரதமர் ரணில் பதவியில் தொடராமல் சகோதரர் மகிந்தா ராஜபக்சவையை பிரதமராக்குவது கோட்டாபயவின் அரசியல் திருப்பம் ஆகும்.

ஆனால் அடிப்படையாக புத்தமதத் துறவிகள் கருத்தாதிக்கம் கொண்ட பூமி இலங்கை. புத்தமதத் துறவிகள் அகிம்சை தத்துவம் என்பது சிங்களவர் என்ற இனத்திற்கு சாதகமாக செயல்படும் போக்கை இலங்கையில் காலம் காலமாக கொண்டிருப்பது மற்றவர்களை இரண்டாம் தர மக்களாக கருதும் போக்கை அதிகரித்திருக்கிறது.

அப்படி பார்க்கும் போது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைத்துப் பிரிவினர்களும் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களில் பாதிக்கப்பட்டதை நினைப்பதில் தவறேதும் இல்லை.

தவிரவும் இஸ்லாமிய ஜிகாதி தத்துவம் அங்கு அரங்கேறியதின் அடையாளமாக நடந்த தாக்குதல் அடுத்த அபாயமாகும். இலங்கை மக்களை ஒழுங்குபடுத்தும் தலைவராக இருப்பார் என்ற கருத்து புத்த மதத்தின் தலைவர்களிடம் உள்ளது.

இது அவர் அதிக ஓட்டுகள் பெற ஒரு காரணமாகும். அப்படி இருக்கும் போது இன்று அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதின் அடையாளமாக புத்தமதத்தின் கேந்திரமான அனுராதபுரத்தில் நாட்டின் ஏழாவது அதிபராக பதவியேற்றது அவர் மத அபிமானத்தின் அடையாளம்.

அந்த நாட்டின் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் தரும் அம்சமாக கூடப் பேசப்படுகிறது. தவிரவும் இத்தேர்தலில் அவருக்கு முஸ்லிம்கள் ஹிந்துக்களாகிய தமிழர்கள் கிறிஸ்துவர்கள் ஆதரவு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் கிடைத்த வெற்றிக்குப் பின் ‘இலங்கையில் வாழும் அனைவருக்கும் பொதுவாகச் செயல்படுவேன்’ என்று கூறியிருப்பதை இனி அவர் தனது செயல்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் கோட்டாபயவின் வெற்றி மனதிற்கு நெருடல் தரும் முடிவாக அமைந்திருக்கிறது. ஆனால் அங்குள்ள மெஜாரிட்டி சிங்கள உணர்வுகளுக்கு ஆக்கம் தரும் முடிவாக இந்த வெற்றி அமைந்திருந்திருக்கிறது.

இதனால் இச்சிறிய நாட்டின் பொருளாதார பிரச்னைகளுக்கு சீனா முழுவதுமாக ஆதரவு தருவதை எந்த அளவு இவர் பயன்படுத்துவார் என்பதையும் இனி அலச வேண்டும்.

ஏனெனில் வடகிழக்கு பகுதிகளில் வீடுகள் கட்ட நிதி மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு இந்திய அரசின் உதவி தாராளமாக இருக்கும் போது அதை அவர் ஒதுக்கி சீனா பக்கம் மட்டும் சாயும் அளவிற்கு செயல்படுவது சுலபம் அல்ல.

இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கையின் உறவை வலுவாக்க இந்திய அரசு யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சர்வீஸ் தொடங்கியிருப்பது அவர்களின் சுதந்திரத்திற்கு உதவும்.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் இஸ்லாமியர் ஆகியோரை அரவணைத்து சிறந்த சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை இந்த அரசு மேற்கொண்டாக வேண்டிய கட்டாய காலம் இது.

மிகக் குறைந்த பரப்பில் உள்ள சிறிய நாடு பொருளாதார பலம் இன்றி சிரமப்படும் நிலையில் அதிக சுற்றுலா வளத்தையும் இழக்காமல் ஆட்சி நடத்த கோத்தபயா செயல்படுவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

– Dina Malar

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply