பசுமை காட்சிகளோடு ஓர் ரயில் பயணம்… – Sri Lankan Tamil News

பசுமை காட்சிகளோடு ஓர் ரயில் பயணம்…

இந்த செய்தியைப் பகிர்க

நாட்டின் காலனித்துவ கால ரயில் கட்டுமானத்தின் சிறந்த உதாரணங்களில் ‘நைன் ஆர்ச் பிரிட்ஜ்’ உம் ஒன்றாகும். இது இலங்கையில் தெமோதர, எல்ல பிரதேசத்தில் இந்த ரயில் பாலம் அமைந்துள்ளது. பிரித்தானிய பொறியாளர்களுடன் இணைந்து, புகழ்பெற்ற இலங்கை பொறியாளரான, “மலையக ரயில்வே” என்ற திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரும், திட்ட மேலாளருமான பி.கே அப்புஹாமி, என்பவரே இதனை நிர்மாணித்துள்ளார். இவரின் நிர்மாணப் பணிகளின் கீழே இந்த பாலம் கட்டப்பட்டது.

இலங்கையின் பொறியியல் சங்கம் வெளியிட்ட ” கான்கிரீட் ரயில்வே வையாடக்ட்” என்ற தலைப்பில், 1923ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில், இப்பாலம் குறித்த திட்டங்களும் வரைபடங்களும் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் பற்றிய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது டிமோதராவில் அமைந்துள்ளது, இப்பாலம் கட்டடக்கலையில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதுடன், புத்திசாலித்தனத்தையும் வெளிகாட்டி நிற்கின்றது. இதன் அருகிலுள்ள மலைப்பாங்கானப் பகுதிகளிலுள்ள பசுமையான பகுதி இதன் அமைவிட அழகை மேலும் மெருகூட்டி காட்டுகின்றது.

இலங்கையில் சுற்றுலாச் சென்று கண்டுகளிக்கக்கூடிய இடங்களில் இந்த பாலமும் பிராதன இடத்தை பிடிக்கின்றது. இது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள “ஹெரிபோர்டர்” பாலத்துக்கு ஒப்பானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply