இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது! – Sri Lankan Tamil News

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது!

இந்த செய்தியைப் பகிர்க

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த நிகழ்வு நேற்று நடைபெறவிருந்தது. எனினும் நல்லநேரம் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பெயர்கள் இறுதிப்படுத்தப்படாமை என்பன காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 15 பேரைக்கொண்ட அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டது.

இந்தநிலையில் குறித்த அமைச்சர்களுக்கான பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply