பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 25 பேர் கைது – Sri Lankan Tamil News

பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 25 பேர் கைது

இந்த செய்தியைப் பகிர்க

அஹுன்கல்ல பொலிஸ் பிரிவின் பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப் பொருளுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பேஸ்புக் விருந்தில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 13 பேரிடம் இருந்து கஞ்சா தொகை ஒன்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

கஞ்சாவை அருகில் வைத்திருந்த சந்தேக நபர்களை தவிர்த்து ஏனையவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குறித்த 12 பேர் பலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அஹுகல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply