மைத்திரிபால மன்னிப்பு அளித்த கொலைக் குற்றவாளிக்கு நேர்ந்த சோகம்! – Sri Lankan Tamil News

மைத்திரிபால மன்னிப்பு அளித்த கொலைக் குற்றவாளிக்கு நேர்ந்த சோகம்!

இந்த செய்தியைப் பகிர்க

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல்பார்க் கொலைவழக்கின் குற்றவாளியான, ஜூட் சமந்த, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, தடைவிக்கபட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்,இன்று இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு-08, காசல் வீதியிலுள்ள பெண்கள் ஊடக ஒருங்கிணைப்பினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சட்டமா அதிபார், சிறைச்சாலைகள் ஆணையாளர், குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 10 பேர், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply