சிறுமியிடம் அத்துமீறல்: இலங்கையைச் சேர்ந்த பிரவீன்குமார் கைது – Sri Lankan Tamil News

சிறுமியிடம் அத்துமீறல்: இலங்கையைச் சேர்ந்த பிரவீன்குமார் கைது

இந்த செய்தியைப் பகிர்க

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மதுரை மாவட்டம், திருவாதவூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் 34 வயதான பிரவீன்குமார் பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் பல்லடம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பெயின்டிங் பணி செய்து வந்தார்.

பல்லடம் – உடுமலை சாலையில் புளியப்பம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் பெயின்டிங் வேலைக்காக வந்த அவர் தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அருகிலிருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, தப்ப முயன்ற டென்னிஸ் பிரவீண்குமாரை பிடித்து பல்லடம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து டென்னிஸ் பிரவீண்குமாரை நேற்று கைது செய்துள்ளதாக” அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply