புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து! ஸ்தலத்தில் பலியான வத்தளை இளைஞர் – Sri Lankan Tamil News

புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து! ஸ்தலத்தில் பலியான வத்தளை இளைஞர்

இந்த செய்தியைப் பகிர்க

வவுனியா, புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் வத்தளை இளைஞரொருவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர்.

இந்நிலையில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பஸ்சுடன் மோதிய நிலையில் குறித்த இளஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதான கிருபாகரன் துஷ்யந்தன் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

அத்துடன் அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply