யாழ் பழைய பூங்காவை யாரும் கவனிக்க மாட்டார்களா? – Sri Lankan Tamil News

யாழ் பழைய பூங்காவை யாரும் கவனிக்க மாட்டார்களா?

இந்த செய்தியைப் பகிர்க

யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு என்று காணப்படும் யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான பழைய பூங்கா எந்த விதமான புனரமைப்பும் செய்யாமல் அழிவடைந்து போகின்றது. இதை யாரும் கவனிக்க மாட்டார்களா?

பிள்ளைகள் விளையாடும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. பல விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பூங்காவானது முற்றாகவே சேதமடைந்து காணப்படுகின்றது.

தினமும் எத்தனை சிறுவர்கள் இப்பூங்காவுக்கு வருகின்றார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வருகின்றார்கள். பூங்காவுக்கு வரும் பெரியவர்களுக்கு 20 ரூபாய் காசு அறவிடுகின்றார்கள். சிறுவர்களுக்கு இலவசம். அதில் வரும் வருமானத்தில் கூட திருத்தம் செய்யலாம் தானே யாழ் மாநகர சபை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

நேற்றுமுன்தினம் அதில் உள்ள குறைபாட்டினை அறியாத ஒரு சிறுமி விழுந்து தலையிலும் காலிலும் காயம் எற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோர் யாழ் மாநகர சபை உறுப்பினர்களை அழைத்து தமது குறைகளை எடுத்துக் கூறினார்கள்.

இனியாவது இச்சிறுமியைப் போல் எவ ருக்கும் நடக்காமல் மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா???

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply