இந்திய அரசாங்கத்தினால் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – Sri Lankan Tamil News

இந்திய அரசாங்கத்தினால் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்திய அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இலங்கை தோட்டத்தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக இந்த புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்விப்பொதுத்தராதர உயர்தர, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்விப்பயிலும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

சாதாரணத்தரத்தில் 6 சிறப்பு சித்திகளைக் கொண்டவர்கள் மற்றும் உயர்தர தகமையைக்கொண்ட 25 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியுடையவர்களாவர்.

விண்ணப்பத்தாரிகள் படிவங்களை நிரப்பி பிறப்புச்சான்றிதழின் பிரதி, கல்வி சான்றிதழ்கள், தமது பெற்றோரின் இறுதி சம்பள சீட்டு மற்றும் விண்ணப்பதாரியின் பெற்றோருக்கான தோட்ட முகாமையாளரின் தொழில் உறுதிப்படுத்தல் என்பனவற்றுடன் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளமுடியும்.

விண்ணப்ப படிவங்களை 36-38 காலி வீதி கொழும்பு 3 என்ற இலக்கத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் கண்டி இலக்கம் 31 ரஜபில்ல மாவத்தையில் அமைந்துள்ள உதவி உயர்ஸ்தானிகரம் என்பவற்றில் இருந்து பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கௌரவ செயலாளர், தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம், அஞ்சல் பெட்டி இலக்கம் 882, கொழும்பு 3 என்ற முகவரிக்கு 2019 டிசம்பர் 27ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply