492 ஈழத்தமிழ் அகதிகளுடன் கனடா சென்ற கப்பலின் தற்போதைய நிலை!! – Sri Lankan Tamil News

492 ஈழத்தமிழ் அகதிகளுடன் கனடா சென்ற கப்பலின் தற்போதைய நிலை!!

இந்த செய்தியைப் பகிர்க

2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி MV Sun Sea என்ற ஒரு கப்பல் கனடாவின் வன்குவார் மானிலத்தின் பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பிராந்தியத்தில் வந்து நின்ற காட்சி உலகத்தின் ஊடகங்கள் அனைத்தையும் அதிர வைத்திருந்தது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கனடாவுக்குத் தப்பிச் சென்ற 492 அகதிகள் அந்தக் கப்பலில் இருந்தார்கள்.

380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர் மற்றும் குழந்தைகள் அந்தக் கப்பவில் மூன்று மாதங்கள் கடலில் பயணம் செய்து கனடாவை வந்தடைந்திருந்தார்கள்.

இவர்கள் தாய்லாந்தில் கப்பலேறி மிகவும் கடுமையான, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட செய்தி உலகை உலுக்கியிருந்தது.

அதுமாத்திரமல்லாது, அந்த அகதிகளை கனடா அரசாங்கம் கையாண்ட விதமும் பாரிய வாதிப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலானவர்கள் இரண்டு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு, 2012ம் ஆண்டு மே மாதமளவில் விடுவிக்கப்பட்டார்கள்.

பயணிகளில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், 19 பயணிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.அவ்வாறு நாடுகடத்தப்பட்வர்களில் சத்தியபாவான் ஆசீர்வாதம என்பவர் சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியிருந்த மிகவும் பிரபல்யமான MV Sun Sea கப்பல் தற்போது உடைக்கப்படுவதாக Canadian Maritime Engineering (CME) அறிவித்துள்ளது.

அகதிகளை ஏற்றிவந்த அந்தக் கப்பலை கனடா அரசு கைப்பற்றி வைத்திருந்த நிலையில், 9 வருடங்களின் பின் உடைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply