அவுஸ்திரேலியாவில் இருந்த அகதிகளுக்கு நேர்ந்த கதி! ஈழத்தமிழ் அகதி கூறும் அதிர்ச்சித் தகவல் – Sri Lankan Tamil News

அவுஸ்திரேலியாவில் இருந்த அகதிகளுக்கு நேர்ந்த கதி! ஈழத்தமிழ் அகதி கூறும் அதிர்ச்சித் தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

அவுஸ்திரேலியாவின் மனுஸ்தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட அகதிகள், பப்பு நியூ கினியாவின் தலைநகரான ஃபோர்ட் மோர்ஸ்பேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் மனுஸ்தீவிலிருந்த முகாம் மூடப்பட்ட நிலையில், அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன், அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 250க்கும் அதிகமான அகதிகள் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களில் 46 பேர் புதிதாக கட்டப்பட்டுள்ள Bomana தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், ஏனைய அனைவரும் அடுக்கமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

“இந்த பகுதி பாதுகாப்பனது இல்லை என பலர் சொல்கிறார்கள். நாங்கள் வெளியில் செல்லும் போது பணம், செல்போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்கிறார்கள்,” எனக் கூறுகிறார் இலங்கைத் தமிழ் அகதியான சமிந்த கணபதி.

அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகையை அவுஸ்திரேலிய அரசு செலுத்தி வருகின்றது. அதேசமயம், இதர செலவுகளுக்கான உதவி போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகின்றது.

இங்கு வைக்கப்பட்டுள்ள பல அகதிகள் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ள சூழலில், பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply