இரவில் வெளியில் சென்றால் பலாத்காரம் செய்வோம்! திமிராக பேசிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய பொலிஸ் – Sri Lankan Tamil News

இரவில் வெளியில் சென்றால் பலாத்காரம் செய்வோம்! திமிராக பேசிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய பொலிஸ்

இந்த செய்தியைப் பகிர்க

ஐதராபாத்தில் கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் குறித்து, சமூகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களால் துஸ்பிரயோகிக்கப்பட்டு, உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சவன் ஸ்ரீராம் என்கிற 22 இளைஞர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ”பெண்கள் வெளியில் சென்றால் நாங்கள் அவர்களை வன்புணர்வு செய்யக்கூடாதா? எல்லா பெண்களும் இதுபோல வன்புணர்வு செய்யப்பட வேண்டும்,” என மோசமான கருத்துக்களை பதிவிட்டிருந்துள்ளார்.

இதனை உற்றுக்கவனித்த சைபர் கிரைம் பொலிஸார், நவம்பர் 30 ம் திகதியன்று தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் செவ்வாய்க்கிழமை அன்று அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply