கோட்டாபயவின் ஆட்சியில் அங்கஜன் மற்றும் விஜயகலாவுக்கு ஏற்படவுள்ள நிலை! – Sri Lankan Tamil News

கோட்டாபயவின் ஆட்சியில் அங்கஜன் மற்றும் விஜயகலாவுக்கு ஏற்படவுள்ள நிலை!

இந்த செய்தியைப் பகிர்க

புதிய அரசியல் திருத்தம் ஏற்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கோட்டாபய அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தால் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும்.

வடக்கு, கிழக்கில் பிரதான கட்சிகளால் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதுபோகும்.மாறாக தமிழரசுக் கட்சிதான் வெற்றி பெறும். 15 ஆசனங்களை வைத்துள்ள தமிழரசுக் கட்சிக்கு 21 ஆசனங்களை பெற்றுக்கொடுப்பதே இதனூடாக நடைபெறும்.

தெற்கில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் மீண்டும் போராட்டங்களை நோக்கி நகரும். புதிய ஹெல உறுமய மீண்டும் காட்டுக்கே போக வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply