மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளராக கோட்டாபயவின் முகவர்! – Sri Lankan Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளராக கோட்டாபயவின் முகவர்!

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு உரிமையுள்ள, கொள்கை கொண்ட கட்சியா? அல்லது கூத்தாடி, கோமாளிகளின் உறைவிடமா? என பலரும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர்.

ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மட்டக்களப்பு மவாட்டம் என்பது ஒரு நிலையான கொள்கை கோட்பாடுகளின் ளவழி வந்த வீரம் விளைந்த பூமியாகும்.

க்டந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது கொள்கைக்கு அப்பால் தேவையற்ற விதண்டா வாதத்தினால் தனி நபர்களின் உறைவிடமாக மாறியிருக்கிறது.

2015 வரை மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் இருந்தவரே சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்.

இவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாம் இலக்க வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.

அத்துடன் இவர் கூட்டணியில் தான் ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான் போன்றோர் போட்டியிட்டு ஹிஸ்புல்லாஹ் தேசிய பட்டியல் மூலமாக செல்ல வழி ஏற்படுத்தியவர் தான் சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்.

இராசமாணிக்கம் என்பவரின் பேரன் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான சலுகைகளை இவருக்கு கொடுப்பதென்பது யோசித்து பார்க்க வேண்டிய விடயமாகும்.

இந்த விடயம் தொடர்பில் இப்போதே கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இவரின் தாய் சிங்களம் இவரின் வருங்கால மனைவியும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.

இந்த நிலையில் கட்சியின் மாவட்டத்திலுள்ள தலைவர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இவரிடம் ஒரேயொரு திறமை மாத்திரமே உள்ளது. அதுதான் நன்றாக பணத்தை செலவழிக்கும் திறமை.

இவரது உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள நிலையில் இவரிடம் பண பலம் உள்ளது. அதனை வைத்து மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு பந்து, துடுப்பாட்ட மட்டை என்பவற்றை பெற்றுக் கொடுத்து கைக்குள் அடக்கி வருகிறார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி மற்றும் வடக்கு கிழக்டகு தமிழரசு கட்சியணி வாலிபர் முன்னணி தலைவர் சேயோன் தலைமையிலானோர் இவரின் பின்னால் செல்கின்றனர்.

இது தொடர்பில் பல்வேறு அரசியல் புத்தி ஜீவிகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், இந்த விடயம் சம்பந்தனின் காதுகளுக்கு சென்ற போதும் எந்த வித நடவடிக்கையும் இது வரையில் எடுக்கப்படவில்லை.

நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக வடக்கிலிருந்து வரும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு தடபுடலாக ஹோட்டல் மற்றும் உணவு உபசாரங்களை வழங்கி தன் பக்கம் வளைத்துக் கொள்கிறார் இந்த சாணக்கியன்.

நக்குண்டார் நாவிழந்தார் என்பது போது அவர் போட்ட சாப்பாட்டால் மாவட்டத்தில் பிறந்த முக்கிய அரசியல்வாதிகளை புறந்தள்ளி இந்த சாணக்கியனுக்கு முன்னிலை இடத்தை வழங்க சிபாரிசு செய்யப்படுகிறது வடக்குத் தலைமை.

இது எந்த வகையில் நியாயமாகும்? இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மூன்று ஆசனம் கிடைக்கும் என்பது உறுதி.

இதில் யார் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல என அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.

இவ்வாறான நிலையில் அந்த மூன்றில் ஒன்றுக்காக தன்னிடம் இருக்கும் பண பலத்தை காட்டி அனைவரையும் தன் கைக்குள் போட்டுக் கொள்ள இவர் முனைகிறார்.

இவ்வாறான நிலையில் மகிந்த விசுவாசியான அருண் தம்பிமுத்து என்பவர் மாவட்ட அபிவிருத்திக்காக ஆறு கோடிக்கும் அதிகமான பணத்தை கொட்டுகிறார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நிகராக போட்டியிட்டு தன்னால் வெல்ல முடியாது என்பதற்காக சாணக்கியன் அரசியல்வாதிகளை பணத்தின் மூலம் காக்காய் பிடிக்கும்வழியை தேர்ந்தெடுத்துள்ளார்.

அத்துடன் அந்த மூன்றில் ஒரு இடத்தை எடுத்து தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைத்து கோட்டாபயவிற்கு ஆதரவு அளிப்பதற்கான இரகசிய வேலைத்திட்டத்தையும் மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

இதற்கான இரகசிய சந்திப்பொன்று பசில் ராஜபக்சவுடன் கொழும்பில் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக வருபவருக்கு எதையும் சொல்ல முடியாது. என்பதால் அமைச்சுப் பதவியையும் பெற சாணக்கியன் தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் மட்டக்களப்பு தமிழரசு கட்சி வாலிபர்களுக்கு இவரது பங்களாவில் வழங்கும் உபசாரத்தால் அவர்களும் இந்த அநியாயத்திற்கு எதிராக வாய் திறப்பதில்லை.

இனி மேலாவது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நிதானமாக ஒரு முடிவை தமிழரசு கட்சி எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் உரிய ஆதாரங்களுடன் அனைத்து கண்கட்டு வித்தைகளும் அம்பலப்படுத்தப்படும்.

இது தமிழரசுக் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள முதல் எச்சரிக்கையாகும். இனியேனும் சரியான பாதை தெரிவு செய்யப்படாவிட்டால் தக்க முடிவு எடுக்கப்படும் என தமிழ்த் தேசியகத்தின் புத்தி ஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இராசமாணிக்கம் என்பவரின் பேரன் எனபதற்காக சாணக்கியனுக்கு இவ்வளது சலுகை கொடுக்கப்படுமாயின், தியாக தாயதான அன்னை பூபதியின் புத்திரன் பிள்ளையானின் தீவிர ஆதரவாளன் தற்போது அவற்றை உதறி விட்டு தானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியலுக்கு வர விரும்பம் உள்ளது என தெரிவித்தால் அவருக்கு இடம் வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன் வருவார்கள் எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அபிவிருத்தி தொடர்பான பட்டிருப்புத் தொகுதியின் கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவுடன் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 69வது பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பு காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளை ஏற்பாடுசெய்த ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற போது மகிந்தவின் மிகவும் நெருங்கிய சகாவான விமலவீர திஸாநாயக்கவுடன்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 2017வரை பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராவும் மகிந்த மற்றும் கோட்டாபயவின் நெருங்கிய சகாவாகவும் முஸ்லீம் அரசியல் வாதிகளின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இணைத் தலைவராகவும் இருந்தவர் சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன் இவரின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது அதற்கான ஆதாரம்

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply