பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபருக்கு நேர்ந்த கதி – Sri Lankan Tamil News

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபருக்கு நேர்ந்த கதி

இந்த செய்தியைப் பகிர்க

திருகோணமலையில் பெண்ணொருவரை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை, மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்தியபோதே அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாவடிச்சேனை, சூரநகர் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருகோணமலை, சேருநுவர பகுதியை சேர்ந்த பெண்ணொருவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கியுள்ளமை தெரியவருகிறது.

கர்ப்பிணியான பெண் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply