நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை – Sri Lankan Tamil News

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை

இந்த செய்தியைப் பகிர்க

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்து முதலாம் தவணை விடுமுறையையடுத்து நாளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பு உட்பட நாட்டின் 6 பகுதிகளில் பாரி குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply