இலங்கையில் இன்று கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து! 31 பேரின் நிலை… – Sri Lankan Tamil News

இலங்கையில் இன்று கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து! 31 பேரின் நிலை…

இந்த செய்தியைப் பகிர்க

தல்கொடபிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏறிச்சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 26 பேர் பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று ஆடை ஊழியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி குருணாகலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொகருல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply