நீதிமன்றம் செல்கிறார் குருநாகல் வைத்தியரின் மனைவி – Sri Lankan Tamil News

நீதிமன்றம் செல்கிறார் குருநாகல் வைத்தியரின் மனைவி

இந்த செய்தியைப் பகிர்க

பெருந்தொகையான பெண்களுக்கு கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டதாக கூறி தமது கணவர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக குருநாகல் வைத்தியர் மொஹமட் செய்கு சியாப்தீனின் மனைவி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியுள்ள தகவலை அடுத்தே அவர் கடந்த மே 24ஆம் திகதியன்று திடீரென்று கைதுசெய்யப்பட்டார்.

தமது கணவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தமது கணவரின் கைது விடயத்தை நிரூபிக்கும் வகையில் காவல்துறையினர் இன்னும் பி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை உட்பட்ட காரணங்கள் இந்த அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்படவுள்ளன.

இதேவேளை வைத்தியர் சியாப்தீனுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்கள் தமது முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply